Sunday, October 30, 2011

A Tribute to Chiyaan Vikram Fans.. [HQ]

                                                            proud to be chiyaan fan

Saturday, October 29, 2011

தமிழ் உணர்வை காசாக்குகிறதா ஏழாம் அறிவு?


கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.
அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’
‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).
இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,
‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று(“bodhi dharma was the 3rd child of king’s skanda in south tamilnadu” written by ‘Hideo Nakamura’ -1955) கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.
போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.
‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார். ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.
நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.
முடிவுரை:
சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

pls give ur comments